கல்முனையில் கள்வன் பொலிஸ்
கல்முனைக்குடி தைக்கா வீதியிலுள்ள வீடொன்றில் பணம் கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகை நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை குறித்த வீட்டில் குடும்பஸ்தர் சுபஹ் தொழுகைக்காக வீட்டை திறந்து வைத்த நிலையில் பள்ளிவாசல் சென்றுள்ளார். இவ்வேளை வீட்டினுள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபரைக் கண்டு அவ்வீட்டிலுள்ளவர்கள் சத்தமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் அயலவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கல்முனைப் பொலிசார் விரைந்து, சந்தேக நபரை கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் (வயது 40) என தெரிவிக்கப்படுகிறது.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment