கட்டிடம் இருந்தும் நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது கல்முனை மாநகர சபையின் இயலாமை
யு.எம்.இஸ்ஹாக்
கரவாகு மேற்கு பொது நூலகம் 42இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் சேனைக் குடியிருப்பு கமநல சேவை மத்திய நிலைய கட்டிடத்தில் 1000 ரூபா வாடகைக்கு நூலகம் இயங்குவது கல்முனை மாநகர சபையின் கையாலாகாத் தனத்தைக் காட்டுவதாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வூ கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார்.
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வூ மாநகர முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்ககிழமை (27) சபா மண்டபத்தில் நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் புதிய நூலக கட்டிடம் அமைப்பதற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட போது நூலகம் தற்காலிகமாக சேனைக் குடியிருப்பு கமநல சேவை மத்திய நிலைய கட்டிடத்திற்கு வாடகைக்கு இடமாற்றப்பட்டது. எனினும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டிடமானது வசதிகள் எதுவூமற்ற நிலையில் வாசிப்பு பகுதி மட்டுமே இயங்கி வருகின்றது. இதனால் இப்பகுதில் உள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலை மாணவர்களும்இவாசகர்களும் பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். புதிய நூலக கட்டிடத்தை திறந்து மாணவர்களின் கல்வி தாகத்தைப் போக்க கல்முனை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட நற்பிட்டிமுனை பொதுச் சந்தை கட்டிடம் பாழடைந்து போயூள்ளது. மூண்று மாடிக்கு நிதி ஒதுக்கப்பட்ட கட்டிடம் இரண்டுமாடி மாத்திரம் கட்டப்பட்டு பயன்பாடின்றி கிடக்கின்றது. காலை மாலை வேளையாக இரண்டு நேரமும் இயங்கிய இப் பொதுச் சந்தையை வியாபாரிகளுக்கு வழங்கி அதன் மூலம் மாநகர சபை வருமானத்தைப் பெறவேண்டும்.
மேலும் நற்பிட்டிமுனையில் உள்ள அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் எங்கே உள்ளது என்று கேட்கும் நிலைக்கு மாறியூள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்ட இம்மைதானத்தை அபிவிருத்தி செய்ய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யூம் கல்முனை மாநகர சபை எந்த நடவடிக்கையூம் எடுக்கவில்லை. இந்த மைதானத்தானத்தின் சொந்தக் காரர்கள் கல்முனை மாநகர சபைதானா என்ற சந்தேகம் உள்ளது. இந்த மைதானத்தின் உரிமை கோரும் ஆவணம் எதுவூம் மாநகர சபையில் இல்லாமல் உள்ளது. இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்து இப்பகுதிவாழ் இளைஞர்களின் விளையாட்டுத் துறைக்கு கல்முனை மாநகர சபை ஊக்கமளிக்க வேண்டும் என கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment