கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளர் அஹமட் முஜ்தபாவை சந்தித்து கலந்துரையாடினார்.
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவரும் தேசிய காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளர் அஹமட் முஜ்தபாவை நேற்று மாலை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது சமகால அரசியல் மற்றும் கல்முனை மாநகர பிரதேச வாழ் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு மாலை தீவு நாடு பங்களிப்புச் செய்வதன் சாத்தியப்பாடு என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment