ஜனாதிபதி நாளை இந்தியா செல்கிறார்!
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை இந்தியா செல்வார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நாளை மாலை இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் நடைபெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துவிட்டன.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, நரேந்திர மோடி நாளை 26ஆம் திகதி இராப்போசன விருந்தளிக்க வுள்ளார். பதவியேற்புக்கு மறுநாளான, 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டுத் தலை வர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப் புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாகக் கலந்துரையாடுவார். சம்பிரதாய பூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக் கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment