கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட நீதி மன்ற கட்டிட தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல்



 கல்முனை நீதி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதி மன்ற கட்டிடங்களின் வசதிகள்  பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல்  இன்று நீதிமன்றக் கட்டிடத்தில் நடை பெற்றது . பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற  இச்சந்திப்பில்  கல்முனை  மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற ,மாவட்ட நீதிமன்ற  நீதிபதிகள் உட்பட  மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகளும் ,சட்டத்தரணிகள் சங்க  அங்கத்தவர்களும்  கலந்து கொண்டனர்.

கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட  நீதி மன்ற கட்டிட  தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன்  மட்டக்களப்பு நீதிமன்றங்களின் குறைபாடுகளும்  கண்டறியப்பட்டன .

கல்முனைக்கு வருகை தந்த  பிரதம நீதியரசரை கல்முனையின் முதல்வர்  சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று