கல்முனை வலயத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் வெளி வலயத்தில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு தீர்வு!

கல்முனை கல்வி வலயத்திலிருந்து அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களுக்கு 02 வருட காலம் சேவையாற்றுவதற்காக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் சேவைக்காலம் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ளதனால் அவர்களை கல்முனை கல்வி வலயத்திற்கு மீண்டும் இடமாற்றுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைசர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மிகவிரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் 02 வருடங்களை பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் வழங்கப்படும் என்பதற்கிணங்க மாகாண கல்வித் திணைக்களத்தின் வாக்குறுதியை நம்பி 02 வருடங்கள் வெளி வலயங்களில் சேவையை பூர்த்தி செய்த எங்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் எழுத்து மூலமாக வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி இதுவரைக்கும் இடமாற்றம் வழங்கப்படாமை மிகுந்த மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும், திணைக்களத்தின் மீது அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் தெரிவித்திருந்தனர்.

எனவே 02 வருடங்கள் கல்முனை வலயத்திற்கு வெளியே ஒப்பந்த சேவையாற்றிய தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றத்தை மேற்கொள்வதற்கும், இதனால் அவர்கள் சேவையாற்றிய பாடசாலைகளில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு கல்முனை வலயத்திலுள்ள மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் கவ்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.

Comments