மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு கை தொலைபேசி மூலம் தூசித்த ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிசாரினால் கைது

கல்முனை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவர்களை தூண்டி ஆசிரியை ஒருவருக்கு  கை தொலைபேசி மூலம் தூசித்த  ஆசிரியர் ஒருவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளார் .

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சம்பந்தப் பட்ட ஆசிரியை கல்முனை போலிஸ் நிலையத்தில்   இன்று முறைப்பாடு செய்ததை அடுத்தே  குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பதாக  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார் 

இந்த சம்பவம் தொடர்பாக  குறித்த ஆசிரியை செய்யப்பட்ட  முறைப்பாட்டில்  தெரிவிக்கப் பட்டுள்ளதாவது  தனக்கு ஒவ்வொரு நாளும் எனது கை தொலை பேசிக்கு அநாமோதய அழைப்புக்கள் வந்தன  எனக்கு யார் என்பதை அடையாளம் காண முடியாதிருந்தது . எனக்கு அழைப்பு எடுப்பவர் கூடாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசிக்கொண்டே இருப்பார் . எனினும் தொடர்ந்து பேசியதன்  காரணத்தினால் ஓரளவு என்னால்  இந்தக் குரல் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் என்பதை  சந்தேகித்தேன் . அதன் பிரகாரம் பாடசாலையில் வைத்து அம்மாணவனை அழைத்து நீர் ஏன் எனக்கு தொலைபேசியில்  கூடாத வார்த்தைகளால் பேசுகின்றாய் எனக் கேட்டதற்கு  குறித்த ஆசிரியர்தான் என்னுடைய கைய்யடக்க தொலை பேசியில் உங்களுக்கு பேச சொன்னார்  என தெரிவித்துள்ளார் . இந்த விடயத்தை  குறித்த ஆசிரியை கல்முனை போலீசில் முறைப்பாடு செய்ததை அடுத்து  சம்பந்தப் பட்ட மாணவருடன்  மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப் பட்டனர் . 

மாணவர்களின் வாக்கு மூலத்தை அடுத்தே  குறித்த ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் படுகின்றார் எனவும்  நாளை நீதிமன்றில் ஆசிரியரை ஆஜர் படுதவுள்ளதாகவும்  கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள்யு ஏ.கப்பார்  தெரிவித்தார்

பிந்திய தகவல் 

குறித்த  ஆசிரியரை  கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலை படுத்திய போது  14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் ஏதிர்வரும் 11.06.2014 விசாரணை இடம்பெறவுள்ளது 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி