பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்
நாளை வெள்ளிகிழமை பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் . நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று வருகை தரும் பிரதம நீதியரசர் சம்மாந்துறை மற்றும் கல்முனையில் நடை பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார் .
சம்மாந்துறையில் கட்டிமுடிக்கப் பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடம் காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசரினால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்வுள்ளதோடு பகல் 11.00 மணிக்கு கல்முனை நீதி மன்ற வளாகத்தில் கட்டிடமொன்றுக்கு அடிக்கல் நடும் வைபவமும் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் நீதிபதிகள் உட்பட சட்டத்தரணிகளும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments
Post a Comment