மணமகன் இல்லாத திருமண சம்பந்தம் கல்முனை மாநகர சபை மண்டபத்தில்

 கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று மாலை உயர்மட்டப் பேச்சு நடைபெற்றது.  கல்முனை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்  படாமையால்   அவர்களும் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தை கேள்விப் பட்டு  பார்வையிட சென்ற உறுப்பினர்கள் இருவர் ஒதுங்கிக் கொண்டனர்.
 மணமகன் இல்லாத திருமணம் என அரசியல் பிரமுகர்கள் பலர்  இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கின்றனர்.



 குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முதன்மை விடயங்களாக ஆராயப்பட்டு வருகின்றன  இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், எம்.யோகேஸ்வரன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன், கிழக்கு மாகாண சபை தமிழ்க்கூட்மைப்பு உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோரும் 
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபை மேயர் எம்.நிசாம் கரியப்பர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் கலந்துகொண்டுள்ளனர். 
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .

இதன் போது காரை தீவு சந்தியில் உள்ள சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு சொந்தமான காணி விவகாரம் தொடர்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாக சபையினரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது