கல்முனை மாநகர சபையில் நடை பெற்ற சிறிய விடயத்தை ஊடகவியலாளர்கள் பெரிதாக்கினார்களா ?


எனக்கும் கல்முனை முதல்வருக்கும் உள்ள நெருக்கமான உறவை பிரித்து எங்களுக்குள் பகைமையை வளர்ப்பதற்கு  கல்முனையில் உள்ள அரசியல் வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர்  அதன் ஒரு அங்கமே கல்முனை மாநகர சபையில்  சமீபத்தில் இடம் பெற்ற நாடகமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரியாஸ் தெரிவித்தார் .

நேற்று கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெற்றது .அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் . இதனை சில ஊடகங்கள் திரிவு படுத்தி எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் . இந்த  விடயத்தை பூதாகரமாக்கிய  தகப்பனின்  ஜனாஸாவுக்கு கூட செல்லாத அந்த ஊடகவியலாளரை நான் கண்டிக்கின்றேன் என்றார்.

எனது  நெருங்கிய தமிழ் நண்பர்கள் உள்ளனர் அவர்களுக்கும்  எனக்கும் இடையில் குரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் . மாநகர சபையின் செயலாளர் புலேந்திரன்  சம்பவம் நடந்த மறு தினமே என்னிடம் வந்து  எமக்குள் நடந்த சிறிய சம்பவத்தை  பெரிதாக்கி பூதாகரமாக்குகின்றனர் . என தெரிவித்தார்.

மாநகர சபையில் நடை பெற்ற சம்பவத்தை பற்றி நான் கவலைப் படுகின்றேன்  இனிமேல் இவ்வாறான சம்பவங்கள்  இடம் பெறாது அனைவரும் பாதுகாக்க வேண்டும் .மாநகர சபை உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது  போன்று அங்குள்ள ஊழியர்களின் உரிமையை பாதுகாப்பதும் எனது பொறுப்பாகும் என மாநகர முதல்வர்  நிசாம் காரியப்பர் அங்கு தெரிவித்தார். நடை பெற்ற விடயம் சிறியது என்று கூறினாலும்  வெளி உலகத்துக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நிருவாகத்தில் உள்ள கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிக்கு நடை பெற்றுள்ளது . இனிமேல் இவ்வாறான கசப்பான சம்பவங்கள்  ஒரு போதும் இடம்பெற அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் உறுதியாக தெரிவித்தார் .

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நடக்கின்ற சம்பவங்களின் அடிப்படையில் கிடைக்கின்ற தகவல்களை வெளியிடுவதற்கு சகல உரிமைகளையும் கொண்டவர்கள் .பொறுப்புடன் ஊடகவியலாளர்கள் நடக்கவேண்டும் என்ற விடயத்தை ஊடகவியலாளர்களே சபதம் எடுக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார் . 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்