சட்ட விரோத மாடுகள் சவளக்கடையில்


அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பபட்ட 08 மாடுகளை சவளக்கடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு இன்று அதிகாலை சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுவருவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை கினற்றடி சந்தியில் வைத்து மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இது தொடர்பில் சம்மாந்துறை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மாடுகளையும் சந்தேக நபரையும் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சாஹீர் தொரிவித்தார்.  

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்