Posts

Showing posts from September, 2013

5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள் நாளை

Image
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன்படி, சகல மாணவர்களும் தமது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின்   www.doenets.lk   என்ற இணையத்தளத்தினூடாக நாளை பிற்பகல் தெரிந்து கொள்ளலாம். இதேவேளை, இம்முறை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 455 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று மாநகர சபை கட்டிடம் திறப்பு விழா

Image
அக்கரைப்பற்று  மாநகர சபை  வளாகம் நேற்று மாலை திறந்து வைக்கப் பட்டது . மாநகர முதல்வர் அதாவுல்லா  சக்கி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா  பிரதம அதிதியாக கலந்து வளாகத்தை திறந்து வைத்தார் .

இடமாற்ற பிரியாவிடை வைபவம்

Image
கல்முனை மாநகர சபையில் முகாமைத்துவ  உதவியாளராக  ஐந்து வருடங்களாக கடமையாற்றி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றலாகி சென்ற யு.முகம்மது இஸ்ஹாக்  அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் மாநகர முதவர் தலைமையில்  பிரியாவிடை வைபவம் நடை பெற்றது . நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தை கொண்ட இஸ்ஹாக்  தனது அபிமானத்துக்கு உரியவர் என்றும்  எனது விசுவாசி என்றும் ஒப்படைக்கின்ற பணிகளை  உரிய நேரத்துக்குள் திருப்தியாக  செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டவர்  என்றும்  எனது அரசியலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்ற  சிறந்ததொரு ஊடகவியலாளர் என்றும்  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார் . அவரது இடமாற்றத்தை இரத்து செய்ய  கிழக்குமாகாண்  சபையில்  கடும் பிரயத்தனம் எடுத்தேன் .எனினும்  என்னுடன் அரசியல் காழ்புணர்ச்சி  கொண்ட ஒருசிலரால்  அது அரசியல் மயப்படுத்தப் பட்டு  ஐந்து வருடதுக்குமேல் ஒரே சேவை நிலயத்தில்  தொடர்ந்து சேவையாற்ற முடியாதென்ற  நிலையில்  எனக்கு விருப்பமில்லாமலே  ஜனவரிக்...

விமான நிலையத்தில், விசேடமான குளியல் அறைகள் தேவை!!

Image
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சுங்க தேடுதல்களை இலகுபடுத்துவதற்கு விசேடமான குளியல் அறைகள் அவசரமாக தேவைப்படுவதாக சுங்கப்பணிப்பாளர் சரத் நோனிஸ் கூறினார். தங்கம் மற்றும் ஹெரோயின் போன்றவற்றை உடலின் உள்உறுப்புகளில் மறைத்து கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதனால் புதிய குளியல் அறை தொகுதிகளை அமைப்பது அவசியமாகியுள்ளதென அவர் கூறினார். அண்மையில் 50 கிலோ எடையுள்ள 500 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பிடிப்பட்டதாகவும் அவர் கூறினார். பெருங்குடல் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளிலிருந்து தங்கத்துண்டுகளையும் ஹெரோயினையும் சந்தேகநபர்களினால் உடலிலிருந்து அகற்றும் போது இரத்தபோக்கு ஏற்படும் அளவுக்கு சிக்கலான நிலைமைகள் தோற்றுவித்தன என்றும் அவர் கூறினார். செப்டெம்பர் 25 வரையில் சந்தேகநபர்களின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், வெளிநாட்டு நாணயம் என்பன 14 சந்தர்ப்பங்களில் கண்டுப்பிடிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

குவைத்தில் இலங்கைச் சிறுவன் ஹரீஸ் மீண்டும் சாதனை!!

Image
குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம் (IPC-Islam Presentation Committee) அவ்காப் அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி" குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்கான பிரிவில் இலங்கை மீயல்லை, மாத்தறையைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் இம்முறையும் தனது பிரிவில் முதலாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்க்கிறார் .அவர் தனக்கான பரிசை நீதியமைச்சின் முதன்மைச் செயலாளரிடம் இருந்து  பெற்றுக்கொண்டார். கடந்த வருடப் போட்டியிலும் (அல் ருஹைமானி-2012) மற்றும் குவைத்தில் நடாத்தப்பட்ட இன்னும் பல குர்ஆன் மனனப் போட்டிகளிலும் இவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் அனைத்து பிரிவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 550 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்……

அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை 2014/2015

Image
யு.எம்.இஸ்ஹாக்  அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  2014/2015 வருடங்களுக்கான  அடையாள அட்டை வழங்குவதற்கு  பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பம்  கோரப்பட்டுள்ளது . இதற்கான விண்ணப்பம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல  அறிவித்துள்ளார் . விண்ணப்பத்தை பூரண படுத்தி முத்திரை அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு  அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ,அரசாங்க தகவல் திணைக்களம் ,163.கிருலப்பன மாவத்த ,கொழும்பு -05 என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது 

மீனவர் கடலில் வீழ்ந்து மரணம்

Image
கடலில் வைத்து படகு இயந்திரத்தை இயக்கிய மீனவர் அக்கணமே கடலில் வீழ்ந்து மரணித்த சம்பவம் சாய்ந்தமருது கடலில் இடம்பெற்றுள்ளது.   சாய்ந்தமருதைச் சேர்ந்த எம். செல்லத்துரை (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமானவர் என கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சாய்ந்தமருது கடலில் இடம்பெற்றுள்ளது.   இரவு மீன்பிடிக்காக கடலுக்குள் செல்லத் தயாரான போது இந்த மீனவர் கரையிலிருந்து சற்றுத்தூரம் தோணியில் கடலுக்குள் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தாவி ஏறிக்கொண்டு அந்தப் படகின் இயந்திரத்தை இயக்கியுள்ளார். இயக்கிய அக்கணமே அவர் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டதாகப் பொலிஸ் விசாரணையில் உறவினர்கள் சாட்சியமளித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள அபூர்வ குழந்தை!

Image
இறைவனின் படைப்பில் மனித இனம் மிகவும் மேலானது. இந்த மனிதப்பிறவியிலும் விசித்திரமான மனிதப்பிறவிகளையும் இறைவன் படைத்துள்ளான் அகோரமான சில ஊனமுற்ற  குழந்தைகளை காணும் போது எம் கண்கள் கசிகின்றனல்லவா? ஒரு பெண் கருவுற்றிருந்தால் அவளுக்கு சுகப்பிரசவம் கிடைக்க வேண்டும் என நாம் பிராத்திப்பதுண்டு ஆனால் எனவே இனிமேல்  நல்ல ஆரோக்கியமான ,அங்கத்திலே ஒரு குறைபாடுமில்லாத பரிபூரண குழந்தையொன்றை பெற வேண்டும் என்றே இனிமேல்  பிராத்திகக வேண்டும் போலுள்ளது.  ஆம் !வெளிநாட்டில் தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள இந்த விசித்திரமான குழந்தையை பார்க்கும் போதும் போது கூட அதே அனுதாபங்கள் தான் ஏற்படுகின்றது அல்லவா?  .  

ஜோர்டான் நாட்டு பிரதிநிதி கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்திப்பு

Image
இலங்கைக்கான ஜோர்டான் நாட்டு பிரதிநிதி (கொன்சலேட்) அபாஸ் அக்பர் அலியை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று முன்தினம் (25.09.2013) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகள், மாநகரத்தின் தேவைப்பாடுகள்  மற்றும் மாநகர வாழ் மக்களின் ஜீவனோபாயம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. விதவைகள், அநாதைகளின் வாழ்வாதாரம், எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்விற்கான கல்வி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இச்சந்திப்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

கல்முனை கட்கரை பள்ளிவாசல் வீதி கொங்ரீட் வீதியாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது

Image
யு.எம்.இஸ்ஹாக்  கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக குன்றும் குழியுமாக சேதமடைந்து கிடந்த  கல்முனை கட்கரை பள்ளிவாசல் வீதி  கொங்ரீட் வீதியாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது  கடந்த 27.02.2013  கடற்கரைப்பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டம்   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் ( படம் இணைப்பு  ) வேலைத்திட்டம் ஆரம்பித்த அன்றைய தினமே  இரவு வேளையில் நினைவு கல் பதாகை என்பன  இனந்தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப் பட்டது ( படம் இணைப்பு ) இந்த வீதி மழை  காலத்தில்  பயணம் செய்ய முடியாதளவுக்கு  வீதியெங்கும்  நீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கும்  இதனால் பாதசாரிகளும் ,பாடசாலை மாணவர்களும் கிராமத்தவர்களும் பல சிரமங்களை எதிர் கொண்டனர்( படம் இணைப்பு )   எனினும் இவ்வீதி  அமைப்பதற்கு 10வருடங்களுக்கு முன்னர்...

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கல்முனை மாநகர முதல்வர் சந்தித்து கலந்துரையாடினர்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர். பிரியெந்த பி. விக்ரமவை  துறைமுக அதிகார சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மீன் பிடி படகுகளை நிறுத்துவதில் கடந்த காலங்களில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் கடல் கொந்தழிப்பு காலத்தில் இதனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மீனவர்கள் தற்போது உபயோகப்படுத்துகின்ற சிறிய மீன் பிடி படகுகள் மாத்திரமன்றி பெரிய அளவிலான மீன் பிடி படகுகளையும் நிறுத்திவைக்க  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு ஒலுவில் துறைமுகத்தில் பிரதேச வாசிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டது.   

சூரை மீன் எமனாக மாறியது ஒருவர் மரணம் பலர் பாதிப்பு

Image
கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில்   புதன்கிழமை சூரை மீன் கறியை உட்கொண்டதால்  ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை 80 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். புதன்கிழமை கிண்ணியா , மூதூர் பகுதிகளில் அதிகளவில்  சூரை  மீன் வலைகளில் பிடிபட்டது.  இதனால் பெரும்பாலான வீடுகளில்  சூரை  மீன் சமைக்கப்பட்டது. இந்த மீன் கறியை உண்டவர்களுள் அதிகமானோருக்கு தலைவலி, வயிற்றோட்டம், உடல் வீக்கம் என்பன ஏற்பட்டன. இதற்காகவே இவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். மூதூரில்  சூரை மீன் உண்ட  ம.பெசாரியன் (56 வயது ) என்பவர் மரணமடைந்துள்ளார். இதனை  விட 26 பேர் மூதூர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 இற்கும் மேற்பட்டோர் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை கிண்ணியாவில்  சூரை  மீன் கறியை உண்ட அறுவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 40 பேர்  வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொது மக்கள் உண்ட  சூரை  மீனின...

இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்!!

Image
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கின்றது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகல நோயாளர்களையும் எச்.ஐ.வி. பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காது போனால் எயிட்ஸ் நோய் தொற்று நோய் போல் பரவ ஆரம்பித்து விடும். இருப்பினும் இலங்கையில் ஆபத்தான பாலுறவுகளில் ஈடுபடும் நபர்கள் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. இதுவே இந்த நோய் வேகமாக பரவ காரணமாகியுள்ளது. அதன்படி 2011 ஆம் ஆண்டு 146 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு 186 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் எயிட்ஸ் நோய் பாதிப்...

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கணணி ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

Image
யூ.எம்.இஸ்ஹாக்  Principal Mrs.J.Haarees மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஐயாயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யூம் செயற்றிட்டத்தின் கீழ்புனர் நிர்மாணம்  செய்யப்பட்ட கல்முனை கல்விவலயதுக்குட்பட்ட  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கையளிப்பு விழாவூம் கணணி ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவூம் இன்று (26) நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி ஜே.ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற  இவ்வவைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யூ+.எல்.எம்.ஹாஸிம்இ கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஏ.எச்.நபார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசான், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் அறிக்கை கையளிப்பு!

Image
இஞைர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று தென்கிழக்கு பல்கலைகழத்தில் பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் அறிக்கை ஒன்றை கையளித்தார். அத்துடன் அவர் நினைவுச் சின்னம் ஒன்றையும் பிரதியமைச்சருக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் தொழில்சார் கற்கை நெறிக்கான பணிப்பாளர் முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக முறை சாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை வலயக் கல்வி அலுவலக முறை சாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்  இன்று 25.09.2013  கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது. முகாமைதுவதுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் பீ .எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் உட்பட பிரதிகல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்  என் பலர் கலந்து கொண்டனர். அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த வீதி ஊர்வலத்தில்  பாடசாலை மாணவர்கள் அடங்கலாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .கல்முனை நகர் ஊடாக நடை பெற்ற ஊர்வலத்தில் மாணவர்கள் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர் . நீடித்த நிரந்தர அபிவிருத்திக்காக எழுத்தறிவு ,எந்தப் பிள்ளையும் கற்க மாட்டாதென்ற தப்பெண்ணம் எம்மிடம் இருக்கக் கூடாது ,பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் முதலீடான கல்வியை வழங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் ,பிள்ளைகள் தினமும் பாடசாலைக்கு செல்வதை உறுதிப் படுத்துங்கள் ...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் போனஸ் விபரம்

Image
மாகாண சபை போனஸ் ஆசனங்களிற்கான பெயர் விபரங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாவட்டத்திற்கு என்.பி.எம்.எம். தாஹிர், நுவரெலியா மாவட்டத்திற்கு நிமல் பியதிஸ்ஸ, மாத்தளை மாவட்டத்திற்கு டி.ஜயதிஸ்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு ஏ.பி.கீர்த்தி ரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டள்ளனர்

புத்தளம் வாக்குச் சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

Image
மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வட மேல் மாகாண சபை தேர்தலின் புத்தளம் மாவட்ட வாக்கெண்ணும் நிலையமாக சென். அன்றூஸ் கல்லூரி செயற்பட்டது. குறித்த பாடசாலையிலிருந்து வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இந்த வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால்  இன்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதன்போது புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தரனவினால் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி புதன்கிழமை வரை புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரங்க திஸநாயக்கவினால் ஒத்திவைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை!

Image
ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை இலங்கை நேரப்படி இர வு  11.00மணியளவில் உரையாற்றினார். 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு முதலாவதாக ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் உரை நிகழ்த்தினார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனையடுத்து,.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ,  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா ஆகியோர் நியூயோர்க்கில் வரவேற்பின் போது  சந்தித்துள்ளார். அத்துடன்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செய...

மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் ???

Image
நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்க்களே சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புத்தளம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணி கல்முனை விஜயம்

Image
   நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணிக்கு கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழகத்துடனான கால்ப்பந்தாட்ட போட்டியில் கந்துகொள்வதற்காகவே குறித்த அணியினர் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது நைஜீரியா ஏ.வி.சொக்கர் அகடமி கால்ப்பந்தாட்ட அணி 3- 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.பிர்லியன் விளையாஏட்டுக் கழக தலைவர் ஏ.எம்.சம்சுதீனின்  ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த போட்டிற்கு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.