ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை!



ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை இலங்கை நேரப்படி இரவு 11.00மணியளவில் உரையாற்றினார்.

2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு முதலாவதாக ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் உரை நிகழ்த்தினார்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதனையடுத்து,.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ,  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா ஆகியோர் நியூயோர்க்கில் வரவேற்பின் போது  சந்தித்துள்ளார்.

அத்துடன்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.




ஜனாதிபதியின் இம்முறை விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இளைஞர் அலுவல்கள், திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த  சந்திப்பின் போது  ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் உடன் இருந்தனர். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்