ஜோர்டான் நாட்டு பிரதிநிதி கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்திப்பு
இலங்கைக்கான ஜோர்டான் நாட்டு பிரதிநிதி (கொன்சலேட்) அபாஸ் அக்பர் அலியை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று முன்தினம் (25.09.2013) சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகள், மாநகரத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மாநகர வாழ் மக்களின் ஜீவனோபாயம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விதவைகள், அநாதைகளின் வாழ்வாதாரம், எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்விற்கான கல்வி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இச்சந்திப்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
Comments
Post a Comment