புத்தளம் வாக்குச் சீட்டு வழக்கு ஒத்திவைப்பு
மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வட மேல் மாகாண சபை தேர்தலின் புத்தளம் மாவட்ட வாக்கெண்ணும் நிலையமாக சென். அன்றூஸ் கல்லூரி செயற்பட்டது.
குறித்த பாடசாலையிலிருந்து வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இந்த வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தரனவினால் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி புதன்கிழமை வரை புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரங்க திஸநாயக்கவினால் ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment