இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கல்முனை மாநகர முதல்வர் சந்தித்து கலந்துரையாடினர்.

(அகமட் எஸ். முகைடீன்)



கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர். பிரியெந்த பி. விக்ரமவை  துறைமுக அதிகார சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மீன் பிடி படகுகளை நிறுத்துவதில் கடந்த காலங்களில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் கடல் கொந்தழிப்பு காலத்தில் இதனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மீனவர்கள் தற்போது உபயோகப்படுத்துகின்ற சிறிய மீன் பிடி படகுகள் மாத்திரமன்றி பெரிய அளவிலான மீன் பிடி படகுகளையும் நிறுத்திவைக்க  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு ஒலுவில் துறைமுகத்தில் பிரதேச வாசிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டது.   

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்