விமான நிலையத்தில், விசேடமான குளியல் அறைகள் தேவை!!
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சுங்க தேடுதல்களை இலகுபடுத்துவதற்கு விசேடமான குளியல் அறைகள் அவசரமாக தேவைப்படுவதாக சுங்கப்பணிப்பாளர் சரத் நோனிஸ் கூறினார்.
தங்கம் மற்றும் ஹெரோயின் போன்றவற்றை உடலின் உள்உறுப்புகளில் மறைத்து கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதனால் புதிய குளியல் அறை தொகுதிகளை அமைப்பது அவசியமாகியுள்ளதென அவர் கூறினார்.
அண்மையில் 50 கிலோ எடையுள்ள 500 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பிடிப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பெருங்குடல் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளிலிருந்து தங்கத்துண்டுகளையும் ஹெரோயினையும் சந்தேகநபர்களினால் உடலிலிருந்து அகற்றும் போது இரத்தபோக்கு ஏற்படும் அளவுக்கு சிக்கலான நிலைமைகள் தோற்றுவித்தன என்றும் அவர் கூறினார்.
செப்டெம்பர் 25 வரையில் சந்தேகநபர்களின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், வெளிநாட்டு நாணயம் என்பன 14 சந்தர்ப்பங்களில் கண்டுப்பிடிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
Comments
Post a Comment