கல்முனை வலயக் கல்வி அலுவலக முறை சாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்



யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை வலயக் கல்வி அலுவலக முறை சாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்  இன்று 25.09.2013  கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது.

முகாமைதுவதுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் பீ .எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் உட்பட பிரதிகல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்  என் பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த வீதி ஊர்வலத்தில்  பாடசாலை மாணவர்கள் அடங்கலாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .கல்முனை நகர் ஊடாக நடை பெற்ற ஊர்வலத்தில் மாணவர்கள் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர் .

நீடித்த நிரந்தர அபிவிருத்திக்காக எழுத்தறிவு ,எந்தப் பிள்ளையும் கற்க மாட்டாதென்ற தப்பெண்ணம் எம்மிடம் இருக்கக் கூடாது ,பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் முதலீடான கல்வியை வழங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் ,பிள்ளைகள் தினமும் பாடசாலைக்கு செல்வதை உறுதிப் படுத்துங்கள் , இடை விலகும் ஒவ்வொரு பிள்ளயினதும்  கல்விப் பாதிப்புக்கு சமூகத்தின் ஒவ்வொருவரும் பொறுப்பு , வறுமை பிள்ளைகளின் கல்விக்கு தடையல்ல , பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்போம்  என்ற வாசகங்களை கொண்ட சுலோக அட்டைகளை மாணவர்கள் ஏந்தியவண்ணம்  கோசமெழுப்பி  ஊர்வலமாக சென்றனர் .






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்