மீனவர் கடலில் வீழ்ந்து மரணம்

கடலில் வைத்து படகு இயந்திரத்தை இயக்கிய மீனவர் அக்கணமே கடலில் வீழ்ந்து மரணித்த சம்பவம் சாய்ந்தமருது கடலில் இடம்பெற்றுள்ளது.
 
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம். செல்லத்துரை (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமானவர் என கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சாய்ந்தமருது கடலில் இடம்பெற்றுள்ளது.
 
இரவு மீன்பிடிக்காக கடலுக்குள் செல்லத் தயாரான போது இந்த மீனவர் கரையிலிருந்து சற்றுத்தூரம் தோணியில் கடலுக்குள் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தாவி ஏறிக்கொண்டு அந்தப் படகின் இயந்திரத்தை இயக்கியுள்ளார். இயக்கிய அக்கணமே அவர் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டதாகப் பொலிஸ் விசாரணையில் உறவினர்கள் சாட்சியமளித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்