சூரை மீன் எமனாக மாறியது ஒருவர் மரணம் பலர் பாதிப்பு

கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில்   புதன்கிழமை சூரை மீன் கறியை உட்கொண்டதால்  ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை 80 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
புதன்கிழமை கிண்ணியா , மூதூர் பகுதிகளில் அதிகளவில் சூரை மீன் வலைகளில் பிடிபட்டது.  இதனால் பெரும்பாலான வீடுகளில் சூரை மீன் சமைக்கப்பட்டது. இந்த மீன் கறியை உண்டவர்களுள் அதிகமானோருக்கு தலைவலி, வயிற்றோட்டம், உடல் வீக்கம் என்பன ஏற்பட்டன. இதற்காகவே இவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மூதூரில் சூரைமீன் உண்ட  ம.பெசாரியன் (56 வயது ) என்பவர் மரணமடைந்துள்ளார். இதனை  விட 26 பேர் மூதூர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 இற்கும் மேற்பட்டோர் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.


இதேவேளை கிண்ணியாவில் சூரை மீன் கறியை உண்ட அறுவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 40 பேர்  வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொது மக்கள் உண்ட சூரை மீனின் பகுதிகள் விஷேட பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று