இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசான், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் அறிக்கை கையளிப்பு!
இஞைர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று தென்கிழக்கு பல்கலைகழத்தில் பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் அறிக்கை ஒன்றை கையளித்தார். அத்துடன் அவர் நினைவுச் சின்னம் ஒன்றையும் பிரதியமைச்சருக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் தொழில்சார் கற்கை நெறிக்கான பணிப்பாளர் முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment