கல்முனை கட்கரை பள்ளிவாசல் வீதி கொங்ரீட் வீதியாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது

யு.எம்.இஸ்ஹாக் 


கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக குன்றும் குழியுமாக சேதமடைந்து கிடந்த  கல்முனை கட்கரை பள்ளிவாசல் வீதி  கொங்ரீட் வீதியாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது 

கடந்த 27.02.2013 கடற்கரைப்பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டம்   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் (படம் இணைப்பு )

வேலைத்திட்டம் ஆரம்பித்த அன்றைய தினமே  இரவு வேளையில் நினைவு கல் பதாகை என்பன  இனந்தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப் பட்டது (படம் இணைப்பு)


இந்த வீதி மழை  காலத்தில்  பயணம் செய்ய முடியாதளவுக்கு  வீதியெங்கும்  நீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கும்  இதனால் பாதசாரிகளும் ,பாடசாலை மாணவர்களும் கிராமத்தவர்களும் பல சிரமங்களை எதிர் கொண்டனர்(படம் இணைப்பு
 எனினும் இவ்வீதி  அமைப்பதற்கு 10வருடங்களுக்கு முன்னர் முயற்சி எடுக்கப் பட்டபோது அது தடைப்பட்டது. இப்போது  இவ்வீதியை  நிர்மாணிக்க  வேலை ஆரம்பிக்கப் பட்டபோது அன்றைய தினமே  இரவு வேளையில் நினைவு கல் பதாகை என்பன  இனந்தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப் பட்டது மீண்டும் 10 வருடங்கள் கடந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அங்கலாய்த்தனர் . .

எனினும் இறைவன் துணையோடு  இவ்வீதியின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுள்ளது  கொங்ரீட் வீதி  காபட்  வீதி போல் காட்சி தருகிறது (படம் இணைப்பு )விரைவில்  ஆரம்பித்து வைத்தவர்களால்  இவ் வீதி திறந்து வைக்கப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்