நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில்சுகாதாரமும் போசாக்கும்’ கருத்தரங்கு!
நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுகாதாரமும் போசாக்கும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கானது இகல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் போசாக்கினை பேணும் நோக்குடன் பெற்றோர்களுக்காக நடாத்தப்பட்டது. அத்துடன் மாணவர்களின் போசாக்கினை அதிகரிப்பதற்காக நாம் எவ்வாறான உணவு வகைகளைப் பிள்ளைகளுக்கு தயாரித்து ஊட்டவேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்:எம்.ஏ.சீ.ஏ.பஸால், கல்லூரியின் முகாமையாளர் எம்.எம்.றியாஸ், இணைப்பபாளர் ஏ.ஆர் பைறூஸ்கான் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதன்போது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.