கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்!
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 38ஆவது கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த ஆரம்ப விழாவின் வரவேற்புரையை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நிகழ்தினார்.
இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் ஆரம்ப நிகழ்வாக 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில் அமைச்சர் பி.தயாரட்ன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மேற்படி கிழக்கு மாகாண விளையாட்டு விழா நிறைவடைகிறது.
Comments
Post a Comment