முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் பதவி விலகுவேன் என்கிறார் ரிசாட்
அரசிற்கு எதிரான தரப்பினர் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப் படாவிட்டால் பதவி விலக நேரிடும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறி னால் பதவி விலக வேண்டி நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அமைச்சர் களைக் கொண்ட குழுவொன்றை அமைக் குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத் துள்ளார். முஸ்லிம் மக்கள் துரதிஸ்டவசமாக தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அனைத்து கட்சி குழுவொன்றை அமைக்குமாறு அண் மைய அமைச்சரவை கூட்டமொன்றில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய முஸ்லிம் மதநிறுவனங்கள் மீது தொடர்ச்சியாக விரும்பத்தகாத சம் பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை வேதனையளிப்பதாக அமைச்சர் குறிப்பிட் டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Comments
Post a Comment