எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் மரணம்?


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் பக்கவாதத்தினால் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கவாதத்தினால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை தகவல்களை ஆதாரப்படுத்தி MENA செய்தி ஊடக சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
84 வயதான முபாரக் கடந்தாண்டுஇ தனது சர்வாதிகார ஆட்சியிலிருந்து பதவியிறக்கப்பட்டார். மக்கள் புரட்சியின் போது நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாடி எனும் நகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்குரிய சிகிச்சை பலனின்றி போனதாகவும், அவருடைய இருதயம் துடிப்பது நின்றுவிட்டதாகவும், அவர் உயிர் பிழைத்திருப்பதற்கான சான்றுகள் வெகு அரிதாகவே காணப்படுவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இச்செய்தியை இராணுவம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது