வீதிவிபத்து கல்முனைக்குடியைச் சேர்ந்தமுஹம்மது றியாஸ்
கல்முனைக்குடியைச் சேர்ந்த சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ்உரிமையாளர் முஹம்மது றியாஸ் (வயது 29) வாகன விபத்தில் சிக்கி இன்று மாலை அகால மரணமானார்.
நிந்தவூர் ஒலுவில் பிரதான வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் சிறிய ரக லோரி ஒன்றுடன்மோதுண்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்க செல்லும் வழியிலேமரணமடைந்துள்ளார்.
கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் உயர் பீட உறுப்பினரான இவர் சிறிது காலம் வெளிநாட்டில் தொழில் புரிந்திருந்தார்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment