கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்குடியை பிரித்துப்பார்ப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் கல்முனைக்குடியை பிரித்துப் பார்ப்பதானது கண்டிக்கத்தக்க விடயமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சில கிராமங்களில் கிழக்கு மாகாண 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் பல வீதிகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒன்றினை மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அபிவிருத்திப் பணியில் பிரதேசவாதம் மற்றும் அரசியல் பிரிவினைகளை காட்டியிருப்பது என்பது தெட்டத் தெளிவாகின்றது.

 கல்முனைக்குடியில் கடற்கரைப்பள்ளி வீதி, சாஹிபு வீதி, பள்ளி வீதி, காஸிம் வீதி, அலியார் வீதி ஆகிய 5 முக்கிய வீதிகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது.  இருந்தும் குறித்த 5 வீதிகளில்  பள்ளி வீதி மட்டும் வெறும் கண்துடைப்புக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.  எனவே, குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும.; இங்குள்ள குறிப்பிடப்பட்ட சகல வீதிகளையும் நிர்மாணித்து மக்களின் நீண்டகால தேவையினை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதே பிரதேச வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் கல்முனை மாநகர உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்