அரசுடனான பேச்சுக்கு ஹக்கீமின் இடைத்தரகர் வேலை அவசியமில்லை; தமிழ் கூட்டமைப்பு நிராகரிப்பு!


அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தமக்கு இடைத்தரகர் ஒன்று அவசியமில்லை என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தான் இடைத் தரகராக செயற்படத் தயார் என்று மு.கா.தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே கூட்டமைப்பு அவரது பிரசன்னத்தை நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்களின் போதே இடைத்தரகர் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை மு.கா.தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் அதன்போது மத்தியஸ்த பணி தேவை இல்லை என சம்பந்தன் கூறியதாகவும் அறிய முடிகிறது. அரசின் ஓர் அமைச்சர் என்ற வகையில் முடியுமானால் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அரசை வலியுறுத்துமாறு ஹக்கீமிடம் அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேசுகிறோம் எனக் காட்டுவதற்காக ஒரு நொண்டிப் பேச்சுவார்த்தை அவசியமில்லை எனவும் இதனை அரசிடம் போய் சொல்லுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் ஹக்கீமிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார் என மேலும் அறிய முடிகிறது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்