தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் இஸ்மாயில் மீண்டும் பதவியேற்பு!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது உபவேந்தர் இஸ்மாயில் பல்கலைக்கழக மாணவர்களாலும் உத்தியோகத்தர்களாலும் வரவேற்கப்பட்டார் . அதனைத் தொடர்ந்து அவர் தமது கடமையினை வைபரீதியாக ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உபவேந்தர் இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
Comments
Post a Comment