வீதி அபிவிருத்தியில் எந்தவொரு பிரதேசத்திற்கும் அநீதி இழைக்கவில்லை;


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை 
.கிழக்கு மாகாணத்தில் ஜெயகா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி திட்டத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஜெயகா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.
“ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாண சபைக்கு வீதி அபிவிருத்திக்காக 6500௦ மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் யுத்தம், சுனாமி மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனைத் தொகுதியில் 674 மில்லியன் ரூபாவுக்கான வீதி அபிவிருத்திப் பணிகள் முன்மொழியப்பட்டு, அவற்றுள் அநேகமான வீதிகள் பூர்த்தியடைந்தும் இன்னும் சில வீதிகள் நிர்மாணிக்கப்பட்டும் வருகின்றன.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்