நட்பிட்டிமுனையில் மின்னொளி கிறிகட்

நற்பிட்டிமுனை ஒக்ஸ்போர்ட் விளையாட்டுக் கழகம் புனித நோன்புப் பெருநாளை
சிறப்பிக்கும் முகமாக அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 32
பிரபல்யமான கிறிகட் கழகங்களை கொண்டு எதிர்வரும் 2011. 09.02
வெள்ளி,சனி,ஞாயிறு ,ஆகிய தினங்களில் நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கத்தில்
''மெகா நைட்'' மின்னொளி மென்பந்து கிறிகட் சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளது
மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடரில் முதலிடத்தைப் பெறும்
அணிக்கு 15000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கேடயமும் வழங்கப்படவுள்ளதோடு
இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 8000 ரூபா பணப்பரிசிலும்
வெற்றிக்கேடயமும் வழங்கப்படவுள்ளது. இறுதிப்போட்டிக்கு கிழக்குமாகாணசபை
உறுப்பினர் கே.எம்.அப்துல் ராசாக்(ஜவாத்)பிரதம அதிதியாக கலந்துகொள்வதுடன்
இன்னும் பல நிறுவனங்களின் தலைவர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து
சிறப்பிக்கவுள்ளதாக கழகத்தலைவர்
வீ.எம்.மக்பூல் தெரிவித்தார்