கல்முனையில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரீட்சை
பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டபடி இன்று
ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் தர புலமை பரீட்சை இடையூறு எதுவுமின்றி நடைபெற்று முடிந்தது
இப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 427 மாணவர்கள் தோற்றி இருந்தனர்.
சிங்கள
மொழிமூலம் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 610 பேரும்- தமிழ்மொழி மூலம் 79
ஆயிரத்து 817 மாணவர்களும் தோற்றி இருந்தனர். இதற்கென 3721 பரீட்சை
நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை
பிர தேசத்தில் நிலவும் மர்ம மனிதன் பீதி காரணமாக பரீட்சைக்கு தோற்றிய
மாணவர்களை பெற்றோர்கள் நேரத்துக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு
அழைத்து வந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன் .பெற்றோர்கள்
பரீட்சை முடியும் வரை பாடசாலை சுற்றுவட்டத்தில் காத்திருந்தனர்.
கல்முனை கர்மேல் பத்திமா மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதையும் காண முடிந்தது.
Comments
Post a Comment