பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இன்று விசேட கூட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் மர்ம மனிதன் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெறும் விசேட கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Post a Comment