இரவு நேரங்களில் சகல பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு!
பாதுகாப்பு செயலாளர் உத்தரவு
ரமழான்
மாத இரவு நேரங்களில் நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் விசேட
பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.
அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஸ்ரீலங்கா
முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு
அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற
விசேட சந்திப்பின் பின்னரே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.
புனித
ரமழான் மாத இரவுகளில் நோன்பு பிடிப்பதிலும் பள்ளிவாசலுக்குச் சென்று
தராவீஹ் தொழுகையை நிறைவேற்றுவதிலும் நாட்டில் உள்ள சகல முஸ்லிம்களும்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின்
செயலாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment