வன்முறைகளை தூண்டினால் கடும் நடவடிக்கை!
அவசரகால சட்ட
நீக்கத்தை சாதகமாக்கிவன்முறைகளை மீண்டும் தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக
அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்குமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
வன்முறைகளை
முறியடிப்பதற்காகவே அவசர காலச்சட்டம் இதுவரைகாலமும் அமுலில்இருந்தது.
இன்று நாட்டில் அமைதி திரும்பியிருப்பதனாலேயே அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி
முற்றாக நீக்கியூள்ளார்.
ஆயினும் வன்முறைகளை மீண்டும்
“அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி எவரும் வன்முறைகளுக்கு தூபமிட்டால் அரசு பார்த்துக் கொண்டிருக்காது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும்” என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறினார்.
“அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி எவரும் வன்முறைகளுக்கு தூபமிட்டால் அரசு பார்த்துக் கொண்டிருக்காது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும்” என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறினார்.
நாட்டில்
சமாதானமும் அமைதியூம் நிலைகொண்டிருக்கின்ற இன்றைய சு+ழ்நிலையில் அவசரகால
சட்டத்தின் கடுமையான சட்டவிதிகள் அவசியமில்லை என்பதை அரசாங்கம் நன்கு
உணர்ந்திருந்த காரணத்தினால் தான் சில காலமாக அவசரகால சட்டவிதிகளை
படிப்படியாக தளர்த்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ நாட்டு மக்களின் அமைதியான
வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில்
அவசர கால சட்டத்தை முற்றாக நீக்கிவிடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தீர்மானத்தை அறிவித்தார்.
அவசரகால
சட்டம் நீக்கப்பட்டது குறித்து இந்நாட்டின் சனத்தொகையின் 98 சதவீதமான
பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
Comments
Post a Comment