விருப்பு இலக்கம் திங்களன்று
நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்க
எதிர்பார்த்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி.சுமணசிறி
தெரிவித்துள்ளார்.
திங்களன்று விருப்பு இலக்கம் வழங்கப்பட வேண்டுமானால் அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதுவரையில் மூன்று மாவட்டங்களில் இருந்தே வேட்பு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மீதமுள்ள மாவட்ட வேட்பு மனுக்கள் கிடைத்துவிட்டால் விருப்பு இலக்கங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

Comments
Post a Comment