முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிக...
300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்த்தி உதவி தொகையை பெற்றுக் கொண்டுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் டபிள்யு.ஜே.எல்.எஸ் விஜயசிறி தெரிவித்துள்ளார் இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை 15வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமூர்த்தி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த பட்ச தகுதியற்றவர்கள் பலர் உதவிதொகையை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளனர். 16லட்சம்பேர் உதவித் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் இதில் 3லட்சம்பேர் உதவிதொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 100மில்லியன் ரூபா பணத்தை செலவிடுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்
Comments
Post a Comment