நிசாம் காரியப்பர் கல்முனை மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக நியமனம்
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-


கல்முனை மாநாகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் சார்பாக கட்சியின் சிரேஸ்ட பிரதிதித் தலைவரும் முன்னாள்
வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம். அப்துல் மஜீட், கல்முனை மாநகர
சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ. பசீர் கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், நிசார், தௌபீக், நிசார்டீன்
ஆகியோரோடு புதிய முகம்களாக தொழிலதிபரும் கலாநிதியுமான எம் சிராஜ்,
இளைஞசர்களான அசாம் மௌலவி, பரக்கத் மற்றும் சட்டத்தரணி ரோசன் அக்தார்
உள்ளிட்ட பலர் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்
கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவும் செய்யும் கூட்டம் நேற்று கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ் ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மாலை 5மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை வியாழக்கிழமை 1.30 மணிவரை சூடுபிடித்து வாதி பிரதி வாதங்களுக்கு மத்தியில் தெரிவு இடம்பெற்று முடிந்தது.
அதன் பின்னரே கல்முனை மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக கட்சியின் தலைவரினால் நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெட்ப்புமனு தாக்கல் இன்று இடம் பெற்ற படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
- Get link
- X
- Other Apps