பட்டதாரிகளுக்குவேலைவாய்ப்புவழங்கப் பட வேண்டும்
நாடு பூராகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவர்களின் கஸ்ட்ர நிலை அறிந்து
வேலைவாய்ப்பு வழங்கப் பட வேண்டும் . இன்றிலிருந்து இருபத்தொரு
நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான
விண்ணப்பம் கோரப்படாதவிடது அகிம்சை வழியில் போராட்டத்தில்
குதிக்கவுள்ளதாக அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியும் ,தொழி ரீதியாக
தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின்
தொழில் சங்கம் இணைந்து இன்று நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில்
பிரகடனம் செயப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் ரீதியாக தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழில் சங்க தலைவர் ஏ.எம்.நசார் தலைமையி இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அகில இலங்கை பொது ஊழியர் முன்னணி தலைவர் எஸ்.லோகநாதன் ,பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில் ரீதியாக தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழில் சங்க செயலாளர் எம்.எச்.முபாரக் இருபத்தொரு கோரிக்கை அடங்கிய பிரகடனத்தை வெளியிட்டு வைத்தார்.
Comments
Post a Comment