பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம்.
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் செயற்பாட்டு ரீதியாகவும்,வளங்கள் அடிப்படையிலும், அபிவிருத்தியடைந்து வரும் இவ்வேளையில் இப்பாடசாலைகளில் நீண்டககாலமாக நிரப்பப்படாமல் உள்ள பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக
கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரும்,வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்,வீடமைப்பும் நிர்மானமும்,கிராமிய மின்சாரம்,மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடாக 2008ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 100 கல்வி அலுவலக,காரியாலய ஊழியர்களுக்கான அமைய நியமனம் வழங்குவதற்கும் இவ்வமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 930 முன்பள்ளி ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவுகளின்றி நீண்ட காலமாக கடமையாற்றிவருகின்றார்கள். இவர்களால் வழங்கப்படும் சேவையை ஊக்குவிப்பதற்காகவும்,பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தும் இயங்குவதற்காகவும் அவர்களுக்கு மாதாந்தம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 3000 ருபாய் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் உதுமாலெப்வை மேலும் தெரிவித்தார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment