Posts

எதிர்வரும் 28ம் திகதி இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை

Image
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி இந்து பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அதற்கீடாக   எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாடசாலை நடத்தப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க தெரிவித்தார். மகா சிவராத்திரி தின சமய நிகழ்வுகள் 27ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் மறுநாள் 28ஆம் திகதி நன்பகல் 12 மணிவரை நடைபெறவுள்ளமையினால் இந்து பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் அடுத்த மாதம்

Image
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2013 க்கான செயன் முறை பரீட்சைகள் மார்ச் 4 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை செயன்முறை பரீட்சைகளில் சுமார்  ஒரு இலட்சத்து 57,551 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 163 பரீட்சை மத்திய நிலையங்களில் செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலை   அதிபர்களூடாகவும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை - 2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான தனியார் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மார்ச் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாயிப் பஸ் விபத்தில் இலங்கை ஊடகவியலாளர் மரணம்!

Image
உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக தமது மனைவியுடன் மக்காவுக்குச் சென்ற ஊடகவியலாளர் ஏ.எல்.எம். ஷரீப் தாயிப் நகரில் நடைபெற்ற பஸ் விபத்தில் காலமானார். இவரது ஜனாஸா மக்காவில் உள்ள 'ஷுஹதா ஏ ஹரத்தில்' நேற்று ஞாயிறு மாலை தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கம்மல்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கல்முனை கிராம சேவகர் நியமனம்

Image
கடந்த 2012 ஆம் ஆண்டு பொது நிருவாக அமைச்சினால் நடாத்தப்பட்ட  தரம் 111 கிராம நிலதாரி பதவி வெற்றிடத்துக்கான  போட்டிப் பரீட்சையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக  பிரிவுக்குள்  நிலவும் 12 வெற்றிடங்களுக்கு  18 பேர்  சித்தியடைந்துள்ளனர் . இதன் பிரகாரம்  சித்தி பெற்றவர்கள் பெயரும்  பரீட்சையில் பெற்ற புள்ளிகளும்  வருமாறு I.M.I. Bahjath -139 H.M.Mohamed Nisfan-133 M.I.F.Sarmatha-131 M.A.Rahana- 129 A.R.Kamila - 127 M.S.Masoona Begum -124 B.F.Lihas -121 A.A.Satheela -120 M.N.Fathima Zufa -119 A.L.M.Kaisar -119 S.R.Fasmila - 118 M.A.C.F.Nabilah - 116 A.M.Kiyas -116 A.R.Fathima Sana -115 S.M.Aasath -113 A.R.Shamila -113 A.L.F.Mujahitha -105 U.L.F.Rosana -104 சித்தியடைந்தவர்களுள்  12 பேர் தெரிவு செய்யப் படும் நிலையில் பன்னிரண்டாவது வெற்றிடத்துக்கு 116 புள்ளிகள் பெற்ற நிலையில் இருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குரஸ்ஸ வாலிபர் இருவரது ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன .

Image
இன்று காலை நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த அக்குரஸ்ஸ  வாலிபர் இருவரது ஜனாசாக்களும்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில் இருந்து சற்று முன்னர் உறவினர்களால் அவர்களது ஊருக்கு  எடுத்து செல்லப் பட்டுள்ளது . கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.யூஸுப்  மேற் கொண்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் இரண்டு ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்  பட்டுள்ளன . சம்பவத்தில் மரணம் அடைந்தவர்கள் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த  24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ்  என்பவரும், அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை  முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவருமாகும்.

நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் அக்குரசயை சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர்

Image
இன்று காலை நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் அக்குரசயை சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது  வியாபார நோக்கத்தின் அடிப்படையில் அக்குரசை பிரதேசத்தில் இருந்து  வருகை தந்த இவர்கள் இருவரும் YN -2110 இலக்க முச்சக்கர வண்டியில் அக்கறை பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருக்கையில்  பின்னால் வந்த டிப்பர் வாகனம் முச்சக்கர  வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம்  இன்று 17.02.2014 காலை 6.15க்கு  காரைதீவுக்கும்  நிந்தவூருக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது . இவ்விபத்து சம்பவம் இடம் பெற்ற அதே இடத்தில் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த  24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ்  என்பவரும்,அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை  முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையிலும் இறந்துள்ளனர்  இருவரது ஜனாஸா க்களும் தற்போது  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . டிப்பர் சாரதி கைது செய்யப் பட்டு சம்மாந்துறை பொலிசாரினால

கரவாகு வடிச்சல் திட்டம் மீண்டும் ஆரம்பம்

Image
 மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன அமைச்சினால் மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகில் விவசாயிகளின் நன்மை கருதி புதிதாக நிர்மாணிக்கப்படுள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்வும் கரைவாகு வட்டை வடிச்சல் ஆற்று அகழ்வு இரண்டாம் கட்ட வேலைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும்  நேற்று இடம்பெற்றன. கல்முனை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனையின் பொறியியலாளர் எந்திரி. மெ. திலகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு நீர்ப்பாசனக் காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் முனைய வெளிக்கண்ட விவசாய அமைப்பின் தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் இடம் பெற்ற கரைவாகு வட்டை வடிச்சல் ஆற்று அகழ்வு இரண்டாம் கட்ட வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார். 2008ம் உலக வங்கியின் நிதி உதவியுடன் நியாப் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரைவாகு வடிச்சல் ஆற்று அ

மருதமுனையில் கஞ்சா கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.

Image
கல்முனை பொலிஸ்  நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யூ .ஏ. கப்பார் அவர்களது நேரடி வழி  காட்டலில் கல்முனை பொலிஸ்  பிரிவூக்குட்பட்ட மருதமுனையில்   விற்பனைக்கு தயாராகவிருந்த ஒரு கிலோ  600 கிராம் கஞ்சா கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பீ.ஏ. சோம குமார் தலைமையிலான போலிஸ் குழுவினர்  இன்று (16) காலை  கஞ்சா கைப்பற்றப் பட்ட வீட்டை சுற்றி வளைத்து  தேடுதல் நடத்திய போது இரண்டு பொதிகளில் மறைத்து வைக்கப் பட்ட  நிலையில்  குறித்த நிறையூடைய கஞ்சா கைப் பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் இதனுடன் சம்பந்தப் பட்டவரகள்; என்ற அடிப்படையில் மூவர்  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டவர்கள்   நாளை திங்கட் கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப் படவூள்ளார்கள்.

கல்முனை மாநகரசபையில் 50க்கு மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்

Image
 - மேயர் நிசாம் காரியப்பர்  கல்முனை மாநகர சபையின் இம்மாதத்துக்கான சபை அமர்வு    (2014-02-11) இடம்பெற்றது. இன்றைய சபை அமைவின்போது முதல்வர் நிசாம் காரியப்பர் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக, நீண்ட காலமாக நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக அடிப்படை ஊழியர்களின் நிரந்தர நியமனம் சம்மந்தமான அறிக்கை ஒன்றை சபைக்கு தெரியப்படுத்தினார். இதன்போது கடந்த காலங்களில் கல்முனை முதல்வர்களாக செயட்பட்டவர்களின் முயற்சியைத் தொடர்ந்து தானும் எடுத்துக்கொண்ட பாரிய முயற்சியின் ஊடாகவும், மாகாண சபையின் சம்மந்தப்பட்ட செயலாளர்களின் ஒத்துழைப்புடனும் இந்த நியமனங்களைப்பெற முடிந்ததாகவும், அதில் சுகாதார ஊழியர்கள் 28 பேரும், களவேலையாட்கள் 8 பேரும், வெல்டர் ஒருவரும், பார இயந்திர இயக்குனர் ஒருவரும், கவலாளிக்களும் மற்றும் கடமையாற்றும் அனைத்து சாரதிகளுமாக ஐம்பதுக்கு மேற்பட்டோர் இம்மாதத்திற்குள் நிரந்தர நியமனங்களைப் பெற உள்ளதாக தெரிவித்தார்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஹாசிமின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Image
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.ஹாசிமின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.  கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் பிரதம அதிதியாகவும் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தினரால் யூ.எல்.எம்.ஹாசிமின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னமும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  இந்நிகழ்வில் புதிதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.எஸ்.ஏ.ஜெலீலும் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை மேயர் அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்து உடைத்து விட்டார்

Image
கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர்  மாற்றம் விடயத்தை  கல்முனை மேயர்  அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்ததையூம்  இது விடயத்தை முற்றாக நிறுத்தும்படி கல்முனை முஸ்லிம்களை ஆலோசிக்காமல் ரஊப் ஹக்கீம் கட்டளையிட்டுள்ளமையையூம் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக அதன் தலைவா முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது கல்முனை தரவைக்கோயில் வீதி என அழைக்கப்படும் வீதியில் நூறு வீதம் முஸ்லம்களே வாழ்கின்றனா;. இந்த நிலையில் இவ்வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற முஸ்லிம் மக்களின் அபிலாசையில் உள்ள நியாயத்தை யாரும் குறை கூற முடியாது. அதே போல் பல வருடங்களாக இருக்கும் பெயரை மாற்ற முடியாது என்ற தமிழ் மக்களின் வாதத்தையூம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும் இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் இணைந்து நல்லதோர்  புரிந்துணர்வுக்கு வந்திருக்க முடியூம். இதற்கான சந்தர் ப்பத்தை உருவாக்க நாம் மயற்சி செய்தோம். ஆனால் தவளை தனது வாயால் கெட்டது போன்று கல்முனை மேயார் நிசாம் காரியப்பர்  தனது அரசியல் செல்வாக்கை காட்டுவதற்காக இது விடயத்தை மாநகர சபைக்கு கொண்டு வந்ததன் மூலம் சொல்லால் தீர்க்க முடியூ

எஸ்.ஜனூசின்பெத்தம்மா திரைப்பட வெளியீடும் மற்றும் சவால் பாடல் வெளியீடும்

Image
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன எஸ்.ஜனூசின்  எழுத்து ,இயக்கத்தில் உருவான பெத்தம்மா  திரைப்பட வெளியீடும் மற்றும் சவால் பாடல் வெளியீடும்  துருவம் ஊடக வலையமைப்பின்  ஏற்பாட்டில் S G A  F i l m s  வழங்கவுள்ளது . இந்த வெளியீட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை  09.02.2014 பி .ப 3.30 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. சாம ஸ்ரீ  தேசமானிய எம்.ஏ.சி.ஷர்மில்  தலைமையில் நடை பெறவுள்ள இவ்விழாவில் கிழக்கு மாகான சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார் .  பெத்தம்மா திரைப்பட முதல் பிரதியை வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் சாம ஸ்ரீ  தேசமானியகலாநிதி ஏ.எம். ரிஸ்வி அவர்களும், சவால் பாடல் வெளியீட்டின் முதல் பிரதியை  ஓரஞ் டீ  நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் சாம ஸ்ரீ  தேசமானிய ஏ.எல்.நாசர் அவர்களும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மோட்டார் போக்குவரத்து பிரதம பரீட்சகர் ஏ.எல்.எம்.பாரூக் ,நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை பிரதம பொறியியலாளர்  தம்பி லெப்பை இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொள்வதுடன்  வி

பிரஜாவூரிமை சம்மந்தமான 3நாள் வதிவிட பயிற்சி

Image
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பிரிட்டிஸ் கவவு ன்சில் ஆகியன இணைந்து மாகாண மட்டத்தில் செயற்படுத்துவதற்கானஇ பிரதேச அமைப்பு மற்றும் பிரஜாவவு ரிமை சம்மந்தமான 3நாள் வதிவிட பயிற்சி குருணாகல் மாஸ்பொத ஜனசெத்த பயிற்சி நிலையத்தில் நடாத்தியது. லங்கா யூத்  பாராளுமன்றத்தின் தெரிவு  செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென், மேல் மாகாணத் தேர்தல் மார்ச் 29 இல்!

Image
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளார்.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்றம் - தடுத்து நிறுத்தினார் ரவூப் ஹக்கீம்

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு உகந்த காலம் இதுவெல்லவெனவும் அவ்வாறான நடவடிக்கையினை நிறுத்துமாறும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை மாநகர முதல்வருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். கல்முனையின் நீண்டகால பாரம்பரியங்களைக் கொண்ட தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பில் நீதியமைச்சுக்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர், அங்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கல்முனையின் தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புதிய பெயர் மாற்றம் என்ற சொ

பொத்துவில் நிருபர் இப்றாஹிம் காலமானார்

Image
யு.எம்.இஸ்ஹாக்  பொத்துவில் விசேட நிருபர் எஸ். எம். இப்றாஹிம் நேற்று பிற்பகல் 3.45 அளவில் தனது இல்லத்தில் காலமானார். மூத்த ஊடகவியலாளரான இவர், தினமின சிங்கள பத்திரிகையின் செய்தியாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார். முன்னாள் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கே. வி. எஸ். ஆகவும் பணியாற்றியுள்ளார். இறக்கும் போது இவருக்கு வயது 66 ஆகும். நட்பிட்டிமுனயை பிறப்பிடமாகவும்  பொதுவில்லை வசிப்பிடமாகவும்  கொண்ட இவர் 07 பிள்ளைகளின் தந்தையாவார்  ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 7.00 மணிக்கு பொத்துவில் முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் தலைமையில் நேற்று இரவு ஊடகவியலாளர்கள் பலர்  பொத்து வில்லுக்கு சென்று அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் .

இன மத பேதமின்றி சுபீட்சமாக வாழ வழிசமைப்போமாக

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் பெற்ற இச்சுதந்திரக் காற்றினை சுவாசித்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இன மத பேதமின்றி சுபீட்சமாக வாழ வழிசமைப்போமாக என அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் இன்று (2014-02-04) காலை ஆரம்பமான சாரணியர் ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் முடிவின் போது இந்நிகழ்வுக்கு   பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில்   அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் முன்னாள் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ.முஸ்தபா. அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் சாரணர் குழுத்தலைவர் எம்.ஏ.சலாம், ஏ.ஆர்.எம்.யூசுப் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர் யூ.எல்.எஸ்.ஹமீட் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ்   நாம் இலங்க

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

கல்முனை மாநகர சபையில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசாலில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

சாய்ந்தமருது முபாரக் ஜவுளி மாளிகையில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

Image

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் தேசிய சுதந்திர தின விழா கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இன்று நடை பெற்றது

Image

கல்முனை பிரேதச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தின நிகழ்வுகள்

Image