கரவாகு வடிச்சல் திட்டம் மீண்டும் ஆரம்பம்

 மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன அமைச்சினால் மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகில் விவசாயிகளின் நன்மை கருதி புதிதாக நிர்மாணிக்கப்படுள்ள நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்வும் கரைவாகு வட்டை வடிச்சல் ஆற்று அகழ்வு இரண்டாம் கட்ட வேலைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும்  நேற்று இடம்பெற்றன.
கல்முனை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனையின் பொறியியலாளர் எந்திரி. மெ. திலகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு நீர்ப்பாசனக் காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் முனைய வெளிக்கண்ட விவசாய அமைப்பின் தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் இடம் பெற்ற கரைவாகு வட்டை வடிச்சல் ஆற்று அகழ்வு இரண்டாம் கட்ட வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.
2008ம் உலக வங்கியின் நிதி உதவியுடன் நியாப் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரைவாகு வடிச்சல் ஆற்று அகழ்வு வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான மிதந்து தோண்டும் இயந்திரத்தினையும் நிதி உதவியினையும் பெற்றுத்தருமாறு விவசாய அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.


இதனையெடுத்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் வை.அப்துல் மஜீதின் உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக நீண்ட காலக் குறைபாடாக இருந்த இந்த
மிதந்து தோண்டும் (கொபெல்கோ) இயந்திரம் மீண்டும் கல்முனைப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்டு 2010ம் ஆண்டுடன் கைவிடப்பட்டிருந்த கரைவாகு வடிச்சல் ஆற்று அகழ்வுத் திட்டம் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 7000க்கு மேற்பட்ட நெற் காணிகள் இருபோகம் செய்கை பண்ணக் கூடியதாக உள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் விவசாயிகளும் நன்மையடையவுள்ளனர்.
இத்திட்டத்திற்கென இவ்வருடம் திதுலன - திகாமடுல்ல அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஓதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ளவதன் மூலம் எதிர்நோக்கும் சவால்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்று வெற்றிகரமான நிறைவு செய்து விவசாயிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக பனிப்பாளர் நாயகம் வை.ஏ.மஜித், அம்பாரை பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர்களான பொறியியலாளர்கள் கே.டீ. நிஹால் சிறிவர்தன, எஸ்.எஸ்.எல். வீரசிங்க, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.சுஹைர் இப்ராஹிம் உட்பட நீர்ப்பாசன உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இத்திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் நீர்ப்பாசன உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்