கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஹாசிமின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டில் பிரதிக்
கல்விப்பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் பிரதம அதிதியாகவும் மற்றும்
பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய
ஆலோசகர்கள், கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை வலயக்கல்வி பணிமனைகுட்பட்ட கல்விச் சமூகத்தினரால்
யூ.எல்.எம்.ஹாசிமின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னமும் பரிசும் வழங்கி
கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் புதிதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.எஸ்.ஏ.ஜெலீலும் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment