க.பொ.த சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் அடுத்த மாதம்
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2013 க்கான
செயன் முறை பரீட்சைகள் மார்ச் 4 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை
நடைபெறவுள்ளது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை செயன்முறை பரீட்சைகளில் சுமார் ஒரு இலட்சத்து 57,551 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 163 பரீட்சை
மத்திய நிலையங்களில் செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பாடசாலை
பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களூடாகவும் ,
தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிகளுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை - 2014 ஆம் ஆண்டு உயர்தர
பரீட்சைக்கான தனியார் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம்
திகதி முதல் மார்ச் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனவும்
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment