எஸ்.ஜனூசின்பெத்தம்மா திரைப்பட வெளியீடும் மற்றும் சவால் பாடல் வெளியீடும்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன எஸ்.ஜனூசின்  எழுத்து ,இயக்கத்தில் உருவான பெத்தம்மா  திரைப்பட வெளியீடும் மற்றும் சவால் பாடல் வெளியீடும்  துருவம் ஊடக வலையமைப்பின்  ஏற்பாட்டில் S G A  F i l m s  வழங்கவுள்ளது .

இந்த வெளியீட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை  09.02.2014 பி .ப 3.30 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. சாம ஸ்ரீ  தேசமானிய எம்.ஏ.சி.ஷர்மில்  தலைமையில் நடை பெறவுள்ள இவ்விழாவில் கிழக்கு மாகான சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார் .

 பெத்தம்மா திரைப்பட முதல் பிரதியை வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் சாம ஸ்ரீ  தேசமானியகலாநிதி ஏ.எம். ரிஸ்வி அவர்களும், சவால் பாடல் வெளியீட்டின் முதல் பிரதியை  ஓரஞ் டீ  நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் சாம ஸ்ரீ  தேசமானிய ஏ.எல்.நாசர் அவர்களும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மோட்டார் போக்குவரத்து பிரதம பரீட்சகர் ஏ.எல்.எம்.பாரூக் ,நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை பிரதம பொறியியலாளர்  தம்பி லெப்பை இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொள்வதுடன்  விசேட அதிதிகள் ,சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்