கல்முனை மேயர் அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்து உடைத்து விட்டார்

கல்முனை கடற்கரை பள்ளிவீதி பெயர்  மாற்றம் விடயத்தை  கல்முனை மேயர்  அவசரப்பட்டு ஊதிப்பெருப்பித்ததையூம்  இது விடயத்தை முற்றாக நிறுத்தும்படி கல்முனை முஸ்லிம்களை ஆலோசிக்காமல் ரஊப் ஹக்கீம் கட்டளையிட்டுள்ளமையையூம் முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக அதன் தலைவா முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது

கல்முனை தரவைக்கோயில் வீதி என அழைக்கப்படும் வீதியில் நூறு வீதம் முஸ்லம்களே வாழ்கின்றனா;. இந்த நிலையில் இவ்வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற முஸ்லிம் மக்களின் அபிலாசையில் உள்ள நியாயத்தை யாரும் குறை கூற முடியாது. அதே போல் பல வருடங்களாக இருக்கும் பெயரை மாற்ற முடியாது என்ற தமிழ் மக்களின் வாதத்தையூம் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனாலும் இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் இணைந்து நல்லதோர்  புரிந்துணர்வுக்கு வந்திருக்க முடியூம். இதற்கான சந்தர் ப்பத்தை உருவாக்க நாம் மயற்சி செய்தோம். ஆனால் தவளை தனது வாயால் கெட்டது போன்று கல்முனை மேயார் நிசாம் காரியப்பர்  தனது அரசியல் செல்வாக்கை காட்டுவதற்காக இது விடயத்தை மாநகர சபைக்கு கொண்டு வந்ததன் மூலம் சொல்லால் தீர்க்க முடியூமான விடயத்தை பொல்லால்; போட்டு தாக்கியூள்ளார்  இதன் மூலம் நிசாம் காரியப்பருக்கு அரசியல் சாணக்கியம் என்பது அறவே கிடையாது என்பது புலனாகியூள்ளது.

இரண்டு கெபினட் அமைச்சுக்களைக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சா;களைக்கொண்ட அக்கட்சி இது விடயத்தை மிக இலகுவாக ஜனாதிபதி மூலம் சாதித்திருக்க முடியூம். ஆனால் தமிழ் முஸ்லிம் இனவாதத்தை கிளப்பியே தே ர்தலில் வெல்வதை கொள்கையாகக்கொண்ட இவர் கள் இந்த வீதியையூம் பிரச்சினையாக்கி அர் த்தமற்ற இனவாதங்களை உருவாக்கியூள்ளனர்
தமிழ் மக்களுக்கெதிராகவூம், கல்முனைக்குடி, சாய்ந்தமருது என பிரதேச வாதமும் கக்கியூமே கல்முனை தேர் தல்களில் வெல்லும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மேயரின் பெயர்  மாற்ற விருப்பத்தை தமிழ் மக்கள் கொஞ்சமும் அனுமதிக்கமாட்டாh;கள் என்பது கூட இவா;களுக்கு தொpயாதா? அல்லது தொpந்திருந்தும் வேண்டுமென்றே இன மோதல்களை உருவாக்கி வாக்கு வங்கியை அதிகரி க்க மேயரும் அவர் சகபாடிகளும் இதனை மேற்கொண்டனரா?


     மேற்படி வீதி விடயத்தை மாநகர சபையில் விவாதிக்க வேண்டாம் என மு. கா தலைவா; கல்முனை மேயருக்கு கட்டளையிட்டிருப்பதன் மூலம் நிசாம் காரி யப்பர்  அவசரப்பட்டு அனைத்தையூம் கெடுத்து விட்டாh; என்பதே அh;த்தமாகியூள்ளது. அத்துடன் மேற்படி வீதி விடயத்தில் கல்முனை முஸ்லிம்களின் ஆலோசனைகளை பெறாமல் பாராளுமன்ற உறப்பினா; பொன் செல்வராசாவின் வேண்டுகோளுக்கு அடிபணிந்து இதனை உடனடியாக நிறுத்தும்படி ஹக்கீம் கோhpயூள்ளமை கல்முனை முஸ்லிம்கள் பற்றிய அவரது அக்கறையின்iமையை காட்டுகிறது.

எம்மைப்பொறுத்தவரை கல்முனை மாநகர ஆட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்கள் ஒதுக்கி விட்டு கல்முனையை தiமைiயாகக்கொண்ட கட்சியூடன் இணைந்து முஸ்லிம் தமிழ் இணைந்த மாநகர  ஆட்சியொன்றின் மூலமே இது போன்ற பிரச்சினைகளை பரஸ்பர பேச்சு வாதத்தை மூலம் தீர் க்க முடியூம். இதனை விடுத்து இனவாதத்தை அடித்தளமாக கொண்ட முஸ்லிம் காங்கிரசாலோ அதன் கல்முனை மேயா; நிசாம் கார் யப்பராலோ இதனை ஒரு போதும் தீர் க்க முடியாது.    

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்