எதிர்வரும் 28ம் திகதி இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு
எதிர்வரும் 28ஆம் திகதி இந்து பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்க கல்வி
அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அதற்கீடாக எதிர்வரும் மார்ச் மாதம்
மூன்றாம் திகதி பாடசாலை நடத்தப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் அநுர
திஸாநாயக்க தெரிவித்தார்.
மகா சிவராத்திரி தின சமய நிகழ்வுகள் 27ஆம்
திகதி காலை 6.00 மணிமுதல் மறுநாள் 28ஆம் திகதி நன்பகல் 12 மணிவரை
நடைபெறவுள்ளமையினால் இந்து பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment