பொத்துவில் நிருபர் இப்றாஹிம் காலமானார்

யு.எம்.இஸ்ஹாக் 

பொத்துவில் விசேட நிருபர் எஸ். எம். இப்றாஹிம் நேற்று பிற்பகல் 3.45 அளவில் தனது இல்லத்தில் காலமானார். மூத்த ஊடகவியலாளரான இவர், தினமின சிங்கள பத்திரிகையின் செய்தியாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார்.
முன்னாள் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கே. வி. எஸ். ஆகவும் பணியாற்றியுள்ளார். இறக்கும் போது இவருக்கு வயது 66 ஆகும். நட்பிட்டிமுனயை பிறப்பிடமாகவும்  பொதுவில்லை வசிப்பிடமாகவும்  கொண்ட இவர் 07 பிள்ளைகளின் தந்தையாவார் 
ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 7.00 மணிக்கு பொத்துவில் முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் தலைமையில் நேற்று இரவு ஊடகவியலாளர்கள் பலர்  பொத்து வில்லுக்கு சென்று அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் .

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்