Posts

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வென்ற ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை ?

Image
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹுனைஸ் பாருக் 10,850 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவானார் எனிலும் இவரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்விகண்ட சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வேண்டுவதாக அதற்கு உடன்பட்டால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்படும் என்றும் தவறும் பட்சத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் வளங்கப்படமாட்டாது என்று அறிய முடிவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த சிந்தனை வேலைந் திட்டத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருந்தியாகும் ஐ. ம. சு. மு. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Image
மக்கள் நாட்டுக்காக தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த பயணத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருத்தியாகும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. ம. சு. மு. சார்பாக 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு கூறினார் . ஐ. ம. சு. மு. சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். அச்சமயம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:-இந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அபிவிருத்தி அபிலாஷைகளை செயற்படுத்துவதே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி உல்லாசமாகவும் குடிகாரனாகவும் பொழுதைக் கழிக்காமல் தமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொண

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணக்கப்பாட்டுக்குத் தயார்

Image
தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசுடன் நெருங்கி உறவாடத்த் தயார் என்று நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தெரிவித்தது . அரசாங்கம் நல்லதொரு அரசியல் தீர்வை பிளவுபடாத நாடு ஒன்றினுள் தமிழ் சமூகத்திற்கு கொடுக்குமாயின் தாம் தயார் என அந்த அரசியல் கட்சி நேற்று கொள்கை வெளியிட்டது. எனினும் பழம் பெரும் தலைவர் இரா சம்பந்தன் பத்திரிகையாளரிடம் பேசும் போது அவர்களது கூட்டம் அரச கூட்டத்துடன் பாராளுமன்றத்தில் இணையுமா என்று தெளிவாக குறிப்பிடவில்லை.

பதவிகளுக்காக மு.கா. சோரம் போகாது;தேசியபட்டியலில் இரு இடங்களை ஐ.தே.க.வழங்கியாக வேண்டும்:ஹக்கீம் _

Image
ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன். கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன். அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எம்மை ஏளனப்படுத்தவும், மலினப்படுத் தவுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக எமக்குக் கிடைக்கக் கூடிய இரண்டு தேசியல் பட்டியல் எம்.பிக்களை இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை எம்முடன் முரண்பட வைக்கும் சதியும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது.

ஊர் பெயர் மறந்த JP தம்பி

Image
ஊர் பெயர் மறந்த JP தம்பி ரிஸ்வி நீங்கள் பிறந்து வளந்து கல்வி கற்றது கல்முனையில் உள்ள நற்பிட்டிமுனை கிராமத்தில்தான் . பெற்ற தாயும் , பிறந்த பொன்னாடும் மற்றவைக்கு நிகராகாது

ரவி கருணாநாயக்க எதிர்கட்சி தலைவரா?

Image
எதிர்கட்சித் தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினுள் தலைமைக்கு எதிரானதோர் பனிப்போர் தோன்றியுள்ள நிலையில் இத்தகவல் கசிந்துள்ளது. அத்துடன் மிகவும் அரசியல் அனுபவமிக்க ஜோசப் மைக்கல் பெரேரா வை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க முன்மொழியப்பட்டிருந்தபோதிலும் அவர் அப்பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்நியமனம் தொடர்பாக கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள விடுதியில் ஒன்றில் ஒன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைத்துஉயர் மட்ட உறுப்பினர்களுடனும் கொன்பிரஸ்கோல் () ஊடாக பேசிய பின்னர் இவ்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் ரவி கருணாநாயக்க உள்ள தருணத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினுள் பலதரப்பட்ட சிக்கல் உருவாகியுள்ளமை உணரக் கூடியதாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ

தமிழ் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த மு.கா. தயார் : செயலாளர்நாயகம் ஹசன் அலி தெரிவிப்பு

Image
தேசிய பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவேஇருக்கின்றது என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த தயார் என்று ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ளதகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹசன் அலி மேற்கண்டவாறுகுறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் இது தொடர்பில் மேலும் கூறுகையில், "வடக்கு கிழக்கு விடயம் தொடர்பில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்துபேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒருஇணக்கப்பாட்டுக்கு வந்தால்தான் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்இரண்டு சமூகங்களும் திருப்தியடைக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வரமுடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் இந

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசியபபட்டியல் வை. எல். எஸ்.ஹமீது ?

Image
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமண பெயர்ப்பட்டியலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக் நம்பத்தகுந்த வட்டாரங்க்ள் குறிப்பிடுகின்றன. இந்நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

கிழக்கு மாகாண சபைக்கு புதிய ஆளுநராக அலிசாஹிர் மெளலானா?

Image
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்ட அலிசாஹிர் மெளலானாவிற்கு கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவிவழங்கப்படவுள்ளதாக கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தகவல்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவி வழங்கப்படுவதற்கு முன்னராக கிழக்கின்உதயத்தின் தலைவர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்குறிப்பிடுகின்றன.

இலங்கை தேசிய வானொலியில் மீண்டும் பி.பி.சி தமிழோசை

Image
இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று முதல் தமிழ் பி.பி.சி ஒலிபரப்புச் சேவையை மீண்டும் ஒலிபரப்பவுள்ளது. இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்டு வந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான ஒலிபரப்புச் சேவை கடந்த 14 மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கைத் தேசிய வானொலியில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான பி.பி.சி ஒலிபரப்புச் சேவை மீண்டும் ஒலிபரப்பப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

Image
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்றிரவு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் இணங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். சிறுபான்மையின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் உறுப்புரிமை ஹசனலி நியமனம்

Image
ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் நாடாளுமன்ற தேசியப் பட்டியல் உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமொரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சபீக் ரஜாப்தீன்   அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர்  நிஷாம் காரியப்பர் இதற்கு நியமிக்கப்படலாம். இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைக்கும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அல்லது அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.குமரகுருபரன் நியமிக்கப்படலாம்.

சந்திரநேரு சந்திரகாந்தனால் பியசேனவிற்கு உயிர் அச்சுறுத்தல். பீமன்.

Image
அம்பாறைமாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றது. அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பியசேன பாராளுமன்றபிரதிதித்துவத்தை பெற்றுக்கொண்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுபாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ள பியசேனவிற்கு சகவேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தனால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றஆசனத்தை எவ்வகையிலேனும் பெற்றுக்கொள்வதற்காக சந்திரகாந்தன் பல்வேறுபட்டகுறுக்கு வழிகளைத்தேடிவருவதாக தெரியவருகின்றது. அதனடிப்படையில் பியசேனவின்உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது ஆதரவாளர்கள் பலரும்அச்சம்கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானபோது சிங்களவன்ஒருவனுக்கு தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்குகளை அளிக்க கூடாது எனவிசமப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட சந்திரநேரு சந்திரகாந்தன் பியசேன தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து அவரை பதவி விலகக் செய்து அல்லது சந்தியப்பிரமாணம்செய்வதைத் தடுத்து பதவியைக் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக நம்பப்படுகின்றது. விருப்புவாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளசந்திரகாந்தன் பியசேனவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்

பாராளுமன்ற தோ்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தம் 8 ஆசனங்கள் : 3 ஆசனங்கள் அதிகரிப்பு

Image
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த லில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டிய லில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு ஆசனங்களைத் தனதாக்கி யிருக்கின்றது. மேலும் தேசியப் பட்டியலின் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றும்  அதனுடன் அக்கட்சியின் மொத்த ஆசனங்கள் எட்டாக உயரும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எச். எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நூர்தீன் மசூர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்படாதபோதிலும், அங்கு சின்ன தௌபீக் வெற்றி பெற்றுள்ளமை ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் 21 வேட்பாளர்களை நாடளாவிய ரீதியில் நிறுத்தியிருந்தது.

பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது

கண்டி மற்றும் திருமலை மாவட்டங்களிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படுமென ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகள் சார் எந்த . நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவட்ட த்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திற்குமே மீண்டும் வாக்குப்பதிவு நடாத்தப்படவிருக்கிறது. இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப் படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையாளர் ரத்துச் செய்ததுடன் அவற்றுக்கு மீண்டும் வாக்குப் பதிவு நடாத்துவதற்கு முடிவு செய்திருந்தார். மேற்படி 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ்விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தலின் பின்னரான வன்முறைகள்

அம்பாறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, ஏழாம்குறிச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீட்டின்மீது இன்றுஅதிகாலை 1மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேனொன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தலின் பின்னரான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் : சிறுபாண்மை பிரதிநிதித்துவம் வீழ்சி கண்டுள்ளது.

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 20 தேர்தல் மாவட்ட முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிவிட்டன. இம்முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 117 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 46 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 12 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 05 ஆசனங்களும் கிடைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மொத்தம் 196 பிரதிநிதிகளுள் 180 பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 34 வாக்கெடுப்பு நிலையங்களிலும், திருகோணமலையில் அமைந்துள்ள 01 வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையடுத்து அகில இலங்கை ரீதியான பெறுபேறுகள் மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதிகள் விப

நாடாளுமன்ற தெரிவு காரணமாக கிழக்கு மாகாண சபைக்கு பல புதுமுகங்கள்

Image
கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.எஸ்.எம்.தெளபீக் மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வெற்றிடத்திற்காக ஓட்டமாவடி புர்க்கான், கிண்ணியா லாபீர் மற்றும் புல்மோட்டை அன்வர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், முன்னாள்  மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்காக இதுவரை யாரும் தெரிவுசெய்யப்படவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (R.A)

கல்முனை மாநகரசபையின் முதல்வராக மஷூர் மௌலானா நியமனம்

Image
EXCLUSIVE கல்முனைமாநகர முதல்வராக பிரதி மேயர் மஷூர் மௌலானா நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு தெரிவித்தார். நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் அரசியல் உயர்பீடக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தேர்தலில் கல்முனை மாநகர மேயர் எச்.எம்.ஹரீஸ்வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மஷூர் மௌலானாநியமிக்கப்படவுள்ளார். பிரதி மேயராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஷீர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் ஹசனலி மேலும் தெரிவித்தார். முன்னாள் செனட்டரும்,மூத்த அரசியல்வாதியுமான மஷூர் மௌலானா ஐக்கிய தேசியக்கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும் திகழ்ந்தார். ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலகட்டத்தில் இவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

கல்முனை கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

Image
2010ஆம் ஆண்டிற்கான கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேச வலய மூவின மாணவர்களும் பங்குகொள்ளும் ‘கல்முனை கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்’ எதிர்வரும் 23ஆம் திகதி பாண்டி ருப்பு இந்து மகா வித்தியாலய விளையாட் டரங்கில் வெகு விமர்சையாக ஆரம்பமாகவுள்ளன. வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம். ரீ. ஏ. தெளபீக், எம். கே. எம். மன்சூர், யூ. எல். எம். ஹாசீம், திருமதி புள்ளநாயகம் உட்பட இன்னும் பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மெய்வல்லுனர் மற்றும் பெருவிளையாட்டு நிகழ்ச்சிகள் நான்கு வலய விளையாட்டரங்குகளிலும் பரவலாக இடம்பெறுமென மாவட்ட விழாக்குழு செயலாளரும் ஆசிரிய ஆலோசகருமான அப்துல் சத்தார் தெரிவித்தார். இறுதி நான் நிகழ்வுகள் திருக்கோயில் கல்வி வலயத்திலுள்ள தம்பிலுவில் மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெறும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார் எனவும் சத்தார் மேலும் தெரிவித்தார்.

கல்முனை மாநகர மேயர் யார்??

Image
கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செயப்பட்டுள்ள நிலையில் மாநகர முதல்வர் வெற்றிடத்துக்கு பிரதி முதல்வராக தற் போது பதவி வகிக்கும் மசூர் மவ்லானாவா முதல்வர் ? அல்லது உறுப்பினராக பதவி வகிக்கும் சட்டத்தரணி ரக்கீபா ? என்பதில் சிக்கல் நிலை உள்ளது. தேர்தல் பிரசாரங்களின் போது மாநகர முதல்வர் ஹரீஸ் சட்டத்தரணி ரக்கீபைதான் நியமிப்பதென ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதே வேளை முதல்வர் இல்லாத போதும் , பதவி விலகுகின்ற போதும் நான்தான் முதல்வராவேன் என சட்டப்புத்தகத்தை விரிக்கின்றார் . இதே வேளை பிரதி முதல்வர் பதவி நட்பிட்டிமுனைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனை சாய்ந்தமருதுக்கு தர வேண்டுமென கூறுவதாகவும் பேசப்படுகின்றது. மாநகர சபை பதவி சிக்கலுக்கு இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் உயர் கூட்டம் தீர்வு காணுமா ?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கொழும்பில் இன்று சந்திப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீடக் கூட்டம் இன்று மாலை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இன்று கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். இக் கூட்டத்தில் வெற்றிடமாகவுள்ள கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாகவும் முடிவெடுக்கவிருப்பதாகவும் ஹஸன் அலி கூறினார். கல்முனை மாநகரசபையின் மேயராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற நியமனம் சம்பந்தமாகவும் ஆராயப்படவிருக்கிறது என கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரியவந்துள்ளது.

அம்பாறையில் நியாயமான தேர்தல் - பவ்ரல்

Image

பசீருக்கு ஏறாவூரில் வரவேற்பு

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.மு சார்பில் பாரளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திற்கு ஏறாவூரில் நடைபெற்ற வரவேற்பின்போது எடுக்கப்பட்ட படம்

விகிர்தி புதுவருட பிறப்பு!

Image
புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும்இ ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியூம் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில்புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவூ 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையூள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும்இ செவ்வாய்க்கிழமை பின் இரவூ 12.23 முதல் புதன் காலை 8.23 வரையூம் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது. இப்புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடலாம். (எம்.ரி.977-10:55)